ஆகஸ்ட் 8-ல் வெளியாகிறது ‘டாக்ஸிக்’ டிரெய்லர்… யாஷ் ரசிகர்கள் உற்சாகம்!

‘கே.ஜி.எப்’ படங்களுக்குப் பிறகு யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இந்த கேங்ஸ்டர் டிராமாவை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 1940 முதல் 1970 வரை கோவாவில் நடந்த போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாபியா உலகத்தை மையமாகக் கொண்ட ஆக்ஷன் திரில்லராக படம் உருவாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான ‘லேடீஸ் அண்ட் லேடீஸ்’ அறிமுக வீடியோவும், பின்னர் வந்த டீசரும் இணையத்தில் வைரலானது. அதே நேரத்தில், டீசரில் இடம்பெற்ற சில காட்சிகள் சமூக வலைதளங்களில் சர்ச்சையையும் கிளப்பின.

முதலில் மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த படம் பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஆகஸ்ட் 26-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. யாஷின் மிரட்டலான புதிய அவதாரத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading