பாலிவுட்டின் கிங் கான் எனப்படும் ஷாருக்கான், தற்போது இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கிங்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகும் இந்த ஆக்ஷன் படத்தில், அவரது மகள் சுஹானா கான் முதன்முறையாக வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இசை உரிமையைப் பெற பல முன்னணி ஆடியோ நிறுவனங்கள் போட்டியிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை ‘ராமாயணா’ மற்றும் ‘துரந்தர்’ படங்கள் வைத்திருந்த இசை உரிமை சாதனையை ‘கிங்’ முறியடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு பாலிவுட் வட்டாரத்தில் நிலவுகிறது.
தீபிகா படுகோனே, ராணி முகர்ஜி, அபிஷேக் பச்சன், அனில் கபூர், அபய் வர்மா மற்றும் அர்ஷத் வார்சி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘பதான்’ வெற்றிக்குப் பிறகு ஷாருக்கானும் சித்தார்த் ஆனந்தும் மீண்டும் இணையும் படம் என்பதால் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. பிரம்மாண்டமான செலவில் உருவாகும் இந்தப் படத்தில் ஷாருக்கான் வெள்ளை நிற ஹேர் ஸ்டைலுடன் புதிய ஆக்ஷன் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். “பயம் இல்லை… நான் ஒரு பேரழிவு” என்ற வசனம் ஏற்கனவே ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது. 2026 கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24-ம் தேதி படம் வெளியாக உள்ளது.
