ஹாலோவீன் கொண்டாட்டத்திற்காக வித்தியாசமான தோற்றத்தில் யாஷிகா ஆனந்த்!

2016ஆம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதே ஆண்டில் வெளியான ‘துருவங்கள் பதினாறு’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படம் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தியது. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.

https://www.instagram.com/p/DfPXaCIGIAD/?img_index=6&mdxt=MWppemlmbjltejR5ZQ==

இந்நிலையில், யாஷிகா ஆனந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் மூக்கில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டும், உதட்டில் ரத்தக்கறை இருப்பது போன்றும் அவர் வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளித்தார். இதைப் பார்த்த ரசிகர்கள், அவருக்கு என்ன ஆனது என்றும் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்றும் கவலையுடன் கேள்வி எழுப்பினர்.

ஆனால், அந்தப் புகைப்படங்கள் அனைத்தும் ஹாலோவீன் கொண்டாட்டத்திற்காக அவர் வித்தியாசமான வேடமிட்டு எடுத்தவை என்பது தெரியவந்தது. இதையடுத்து, ரசிகர்களின் கவலை நீங்கியது.

Add a Comment

Leave a Reply