தீபாவளியை முன்னிட்டு சூர்யா, நஸ்ரியா நடிப்பில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற ‘ஆவேசம்’ படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இப்படத்தை இயக்கியுள்ளார். இதன் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ரியா மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கிறார்.
படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, “12 ஆண்டுகளுக்குப் பிறகு நஸ்ரியா மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடன் மூன்று படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தபோதும் அதை அவர் நிராகரித்தார்” என்று தெரிவித்தார்.
மேலும், கடந்த 12 ஆண்டுகளில் தனது படங்கள் மட்டுமின்றி, பல இயக்குநர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளையும் நஸ்ரியா மறுத்துள்ளதாகக் கூறினார். நான்காவது முயற்சியாக தற்போது தங்களது படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு நன்றி தெரிவித்த சூர்யா, நஸ்ரியாவுக்கு ‘நேச்சுரல் ஸ்டார்’ என்ற பட்டத்தையும் வழங்கினார்.
