சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சூர்யாவிடம் ரசிகர்கள் ‘ரோலக்ஸ்… ரோலக்ஸ்…’ என உற்சாகமாகக் குரல் எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த சூர்யா, “ரோலக்ஸ் கதாபாத்திரம் குறித்து இன்னும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். அதற்கான முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தயவுசெய்து லோகேஷ் கனகராஜுக்கு போன் செய்து, என்னை வந்து சந்திக்கச் சொல்லுங்கள்” என்று நகைச்சுவையாகக் கூறினார்.
தொடர்ந்து ரசிகர்களிடம், “அந்தப் படத்தில் நான் ஹீரோவாக நடிக்க வேண்டுமா? அல்லது வில்லனாக நடிக்க வேண்டுமா?” எனக் கேட்டார். அதற்கு ரசிகர்கள் அனைவரும் வில்லன் என்று உற்சாகமாகக் குரல் கொடுத்தனர். இதைக் கேட்ட சூர்யா, “சரி, வில்லனாக நடிப்பதுதான் சிறந்தது” என்று பதிலளித்தார். சூர்யாவின் இந்தப் பேச்சு ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரம் மீதான எதிர்பார்ப்பை மீண்டும் அதிகரித்துள்ளது. இருப்பினும், இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் வெளியீடு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
