‘ஓம்’ படத்தில் ஸ்ரீலீலாவின் கதாபாத்திரம் அறிமுகம்!

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘ஓம்’. தனுஷின் 55-வது படமாக உருவாகும் இதனை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மம்முட்டி மற்றும் பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ருதீன் ஷா தமிழில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதலில் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படம், பின்னர் நவம்பர் 20ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

சமீபத்தில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. தொடர்ந்து, சாய் பல்லவியின் கதாபாத்திர அறிமுக வீடியோவும் வெளியிடப்பட்டது. அதில் அவர் நித்யா ரெட்டி என்ற போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், ஸ்ரீலீலாவின் கதாபாத்திர அறிமுக வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தில் அவர் ‘ரோஜா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply