சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை ‘லக்கி பாஸ்கர்’ இயக்குநர் வெங்கி அத்லூரி இயக்கியுள்ளார்.
விழாவில் பேசிய வெங்கி அத்லூரி, சூர்யா சாரின் ரசிகர்களின் அன்பும் ஆசீர்வாதமும் எங்களுக்கும் கிடைக்க வேண்டும். மமிதா பைஜூ எனக்கு தங்கை மாதிரி, சூர்யா சார் அண்ணன் மாதிரி” என்றார்.ஜி.வி. பிரகாஷுடன் இது தனது மூன்றாவது கூட்டணி என்று கூறிய அவர், “க்ஷஎப்போதும் நான் எதிர்பார்ப்பதை விட அதிகமாக உழைப்பார். இந்தப் படத்தின் இசையிலும் அது தெரியும்” என்று பாராட்டினார்.
படம் குறித்து பேசும்போது, “இது ரசிகர்களுக்கு மட்டும் அல்ல; அவர்களின் பெற்றோர்களுக்கும் பிடிக்கும் ஒரு நல்ல குடும்ப படம். அதே நேரத்தில் ஜென்-சி தலைமுறைக்கும் ரொம்ப கனெக்ட் ஆகும் என்று கூறினார். மேலும், “சூர்யா சார் மற்றும் ராதிகா மேம் சேர்ந்து வரும் ஒரு பத்து நிமிட காமெடி சீன் திரையரங்கையே கலக்கப் போகிறது என்று சிரித்தபடி கூறினார். மேலும் “க்ஷஇந்தப் படத்தில் மீண்டும் லவ்வர் பாய் சூர்யாவை பார்க்கலாமா? என்று கேட்டார். அதற்கு வெங்கி அத்லூரி, இது ஒரு நியூ ஏஜ் படம் சூர்யாவை வேற மாதிரி காண்பீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
