‘கஜினி பட காலத்திலிருந்தே சூர்யா சார்-ஐ ரொம்ப பிடிக்கும்’ – மமிதா பைஜூ | Viswanath And Sons Audio Launch

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகிறது. மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய மமிதா பைஜூ, தயாரிப்பு நிறுவனமான சித்தாராவுக்கு நன்றி தெரிவித்தார். “வெங்கி சார் ரொம்ப குளிர்ச்சியானவர். அவருடன் மீண்டும் வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார்.

சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு முன்பே தவறியதாகவும், இந்த முறை அது நனவானதாகவும் அவர் கூறினார். ஆஃப் ஸ்கிரீனிலும் சூர்யா சார் என்னை மிகவும் இன்ஸ்பையர் செய்திருக்கிறார். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் என்று தெரிவித்தார்.

மேலும், “ஜி.வி. பிரகாஷுடன் இது என் இரண்டாவது படம். செட்டில் சூர்யா சாரும் சுனில் சாரும் எப்போதும் ஜாலியாக இருப்பார்கள். ராதிகா மேம் எனக்கு ஒரு மெண்டர் மாதிரி இருந்தார்” என்று கூறினார். இறுதியில், நிறைய பேரின் கனவில்தான் நான் வாழ்கிறேன். ‘கஜினி’ படத்திலிருந்தே சூர்யா சார் மீது எனக்கு க்ரஷ்” என்று கூறியதும் ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading