பா. இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா மற்றும் துஷாரா விஜயன் நடித்த ‘சார்பட்டா பரம்பரை’ 2021-ல் ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. குத்துச்சண்டையை மையமாகக் கொண்டிருந்தாலும், அரசியல் குறித்தும் பேசியது.
இப்போது அதன் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதில் மீண்டும் ஆர்யாவே கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படம், முதல் பாகத்திற்கு முந்தைய காலகட்டத்தை மையமாகக் கொண்ட பிரிக்வெல் கதையாக உருவாகும் என கூறப்படுகிறது.
சமீபத்தில் இந்த படம் குறித்து பேசிய துஷாரா விஜயன், “சார்பட்டா 2 படப்பிடிப்பு இம்மாதம் தொடங்குகிறது. மீண்டும் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடிக்க ஆவலாக இருக்கிறேன். இது முதல் பாகத்திற்கு முந்தைய கதையைச் சொல்லும் படமாக இருக்கும். கோவிட் காரணமாக முதல் படம் ஓடிடியில் வெளியானது. ஆனால் இரண்டாம் பாகம் திரையரங்குகளில்தான் வெளியாகும். என்று தெரிவித்துள்ளார். இதனால், ‘சார்பட்டா 2’ திரைப்படம் ரசிகர்களிடையே மீண்டும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
