இயக்குனர் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன், கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்கியுள்ள ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் ஜூலை 31-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டாயா மீண்டும் இணைந்துள்ள இந்தப் படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ வெளியானதிலிருந்து சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வந்துள்ள இந்தப் படம், மார்வெல் சினிமாட்டிக் யூனிவர்ஸின் 38-வது திரைப்படமாகும். புதிய வில்லன்கள், அதிரடி காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான விஷுவல்ஸ் காரணமாக உலகளவில் படம் கவனம் ஈர்த்துள்ளது.
இந்தியாவிலும் படம் மாபெரும் ஓப்பனிங்கைப் பெற்றுள்ளது. அனைத்து வயது ரசிகர்களும் குடும்பமாக திரையரங்குகளுக்கு சென்று படத்தை ரசித்து வருகின்றனர். முதல் நாளிலேயே சுமார் ரூ.72 கோடி மொத்த வசூல் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இந்தியாவில் அதிக முதல் நாள் வசூல் செய்த ஹாலிவுட் திரைப்படம் என்ற சாதனையை ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ கைப்பற்றியுள்ளது. முன்னதாக இந்த சாதனை ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
