விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த புகழ்!

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், அவரை பற்றி சிலர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக அவரது தோற்றத்தை வைத்து மோசமான கமெண்ட்கள் வந்த நிலையில், அதற்கு புகழ் கடுமையாக பதிலளித்துள்ளார். “நான் சினிமாக்காரன் என்பதால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்று நினைக்கிறீர்கள். 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து என்னை திட்டும் உங்களுக்கே இவ்வளவு கோபம் இருக்கும்போது, போஸ்ட்பெய்டு பயன்படுத்தும் எனக்கு எவ்வளவு இருக்கும்? வருடம் முழுவதும் உங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியும். ஆனால் எங்களுக்கு வேலை இருக்கிறது, அதை பார்க்க வேண்டும்” என புகழ் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading