‘லக்கி பாஸ்கர் 2’ இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் – வெங்கி அட்லூரி கொடுத்த அப்டேட்!

நடிகர் துல்கர் சல்மான் மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி கூட்டணியில் 2024ஆம் ஆண்டு வெளியான “லக்கி பாஸ்கர்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சித்தாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடித்திருந்தார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சகர்களிடமும் வெற்றியைப் பதிவு செய்தது.

படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இயக்குநர் வெங்கி அட்லூரி தற்போது முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், “லக்கி பாஸ்கர் 2 நிச்சயமாக உருவாகும். ஆனால் ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் பொறுமையாக காத்திருக்க வேண்டும். ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இரண்டு திரைப்படங்களை முதலில் முடிக்க வேண்டியுள்ளது” என்றார்.

மேலும், முதல் பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதன் பணிகள் சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading