திரையுலகப் பயணம் பயங்கரமான அனுபவமாக இருந்தது – சோபிதா துலிபாலா!

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது பத்திரிகைகளில் நடிகைகளின் அட்டைப்படங்களைப் பார்த்து வியந்ததாக நடிகை சோபிதா துலிபாலா தெரிவித்துள்ளார். தன்னைப் போன்ற ஒரு சாதாரணப் பெண்ணால் அந்த நிலையை அடைய முடியுமா என்று அப்போது நினைத்ததாகவும் கூறியுள்ளார்.‌திரையுலகிற்கு வந்தபோது தனக்கு ஆதரவளிக்கவோ, வழிகாட்டவோ யாரும் இல்லை என்றும், அனுபவத்தின் மூலமாகவே அனைத்தையும் கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். அந்தக் காலகட்டம் தனது வாழ்க்கையில் மிகவும் பயங்கரமான அனுபவமாக இருந்ததாகவும் சோபிதா கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply