“காலம் கடந்து நிற்கும் படம்…‘தி ஒடிசி’ பற்றி கமல் ஹாசன் பாராட்டு!

கிரேக்கக் காவியமான ஹோமரின் தி ஒடிசி கவிதையை அடிப்படையாகக் கொண்டு, கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய ‘தி ஒடிசி’ திரைப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகியது. முழுமையாக ஐமேக்ஸ் கேமராவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் தொழில்நுட்ப ரீதியாக பெரும் கவனம் பெற்றாலும், திரைக்கதை குறித்து கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

இந்த நிலையில், நடிகர் கமல் ஹாசன் படத்தைப் பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஹோமர் கனவு கண்டார்; நோலன் அதை நிறைவேற்ற முயன்றார். நான் மனதார பாராட்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “சினிமாவின் குழந்தைகளே, இந்தத் திரைப்படம் காலம் கடந்தும் பேசப்படும். கட்டாயம் பாருங்கள். தி ஒடிசி உலகம் முழுவதும் தனது காவியப் பயணத்தைத் தொடரும் இந்த நேரத்தில், அதற்கான என் புகழ் கவிதை விரைவில் இந்திய பார்வையாளர்களை சென்றடையும்; அதை நான் விரைவில் பகிர்வேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading