ஒரு கையுடன் பிறந்த 10 வயது சிறுமி நிஷா, தனது மாற்றுத்திறனை ஒரு தடையாக கருதாமல், தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் நடனத்தின் மீது கொண்டிருந்த பேரார்வத்தால் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்தார். இதை அறிந்த நடிகை சிம்ரன், நிஷாவை நேரில் சந்திக்க அழைத்தார். அந்த சந்திப்பில், நிஷா நீண்ட நாட்களாகப் பயிற்சி செய்து வந்த சிம்ரனின் பாடலுக்கு அவருடனேயே இணைந்து நடனமாடி மகிழ்ந்தார். மேலும், நிஷாவின் நீண்டநாள் ஆசையாக இருந்த புதிய சைக்கிளையும் பரிசாக வழங்கி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
Add a Comment
