விஜய் சேதுபதி, சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சைத்ரா ஜே. ஆச்சாரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், மணிரத்னத்தின் இயக்கத்தில் நடித்தது குறித்த தனது அனுபவங்களை சைத்ரா பகிர்ந்துள்ளார். அவரது படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனக்காக மிகவும் சிறப்பான கதாபாத்திரத்தை மணிரத்னம் உருவாக்கியுள்ளதாகவும், படத்தில் தனது நடிப்பைப் பார்க்கத் தனக்குள் இருக்கும் குழந்தை ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
‘இஞ்சி வெல்லம்’ படத்தில் பெரும்பாலான காட்சிகளில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்ததாக சைத்ரா கூறியுள்ளார். படப்பிடிப்பின்போது படக்குழுவினர் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்புடனும் இயல்பாகவும் பழகியதாகவும், யாரிடமும் ஆடம்பரமான அணுகுமுறை இருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, பிரபாஸ் நடிப்பில் ஹனு ராகவபுடி இயக்கும் ‘பவுசி’ திரைப்படத்திலும் அவர் நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்குகளும் காட்சிகளும் இதுவரை தனக்குக் கிடைக்காத வித்தியாசமான படப்பிடிப்பு அனுபவத்தை அளிப்பதாக சைத்ரா குறிப்பிட்டுள்ளார்.
