அமெரிக்காவில் புகழ்பெற்ற சான் டியேகோ காமிக்-கான் நிகழ்ச்சியில் திரையிடப்படும் ‘ராமாயணம்’ டிரெய்லர்..!

பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கும் இந்த திரைப்படத்தின் டிரெய்லர், முதலில் அமெரிக்காவில் நடைபெறும் புகழ்பெற்ற சான் டியேகோ காமிக்-கான் நிகழ்ச்சியில் திரையிடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை (ஜூலை 24) காலை 8.00 மணி முதல் 10.00 மணிக்குள் டிஜிட்டல் தளங்கள் மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சான் டியேகோ நகரில் நடைபெறும் இந்த சர்வதேச பாப் கலாச்சார விழாவில், 4,800 பேர் அமரக்கூடிய ‘பால்ரூம் 20’ அரங்கில் ‘ராமாயணம்’ திரைப்படக் குழுவின் சிறப்பு பேனல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் படத்தின் உருவாக்கம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் ரசிகர்களுடன் பகிரப்பட உள்ளன.

நடிகர்கள் ரன்பீர் கபூர், யாஷ், இயக்குநர் நிதேஷ் திவாரி மற்றும் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்கின்றனர். இந்திய இதிகாசமான ராமாயணத்தை உலக ரசிகர்களிடம் கொண்டு செல்லும் முயற்சி, திரைப்படத்தின் பிரம்மாண்ட உருவாக்கம் மற்றும் கதாபாத்திர வடிவமைப்பு குறித்து அவர்கள் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading