பாறையில் படுத்துறங்கிய ‘ஜனநாயகன்’ இயக்குனர் ஹெச் வினோத்… நெகிழ்ச்சியான நினைவுகளை பகிர்ந்த இரா. சரவணன்!

‘ஜனநாயகன்’ திரைப்படத்தை இயக்கிய எச். வினோத் குறித்து, ‘நந்தன்’ படத்தின் இயக்குநர் இரா. சரவணன் தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். முதல்வர் விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் இரா சரவணன் இயக்குனர் வினோத்துடன் இணைந்து கதை விவாதத்தில் பங்கேற்ற அனுபவத்தையும், அவரது எளிமையான வாழ்க்கை முறையையும் நினைவுகூர்ந்துள்ளார்.

அவரது பதிவில், ‘வா… போகலாம்’ என்று மட்டும் அழைத்தார். பயணம் வயநாட்டில் முடிந்தது. வினோத், அவரது இரண்டு உதவி இயக்குநர்கள், நான் என நான்கு பேர் மட்டுமே இருந்தோம். விஜய் சார் படத்தின் கதை விவாதம் என்பதால் பெரிய ஹோட்டலில் நடக்கும் என நினைத்தேன். ஆனால், ஒரு மலைப்பகுதியில் உள்ள எளிய குடிசை வீட்டிற்கே எங்களை அழைத்துச் சென்றார். எளிமையான இடம், எளிய உணவு என, ஒரு சாமியாரைப் போலவே அவர் வாழ்ந்தார். தீவிரமாக விவாதித்து முழு திருப்தி கிடைத்த நாளில், பாறையின் மீது அமைதியாக படுத்து உறங்கினார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘இந்தப் பூவுலகில் நாமெல்லாம் புழு, பூச்சிகளைவிடச் சிறியவர்கள்’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே, எந்த வெற்றியையும் தலைக்கேற்றிக் கொள்ளாத மனிதர் வினோத். அவருக்கு இன்னும் பல உயரங்கள் காத்திருக்கின்றன. ‘ஜனநாயகன்’ வெற்றி பெறட்டும்; ஜனநாயகமும் செழித்தோங்கட்டும்” என்று தனது வாழ்த்துகளையும் இரா. சரவணன் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading