‘மீசைய முறுக்கு 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு… வீடியோவுடன் அப்டேட் வெளியிட்ட படக்குழு

ஹிப் ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் செப்டம்பர் 25-ஆம் தேதிதிரை உலகம் முழுவதும் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அப்டேட்ஐ ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். ஏற்கனவே டீசர் மற்றும் பாடல்கள் பெற்ற வரவேற்பால் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு உயர்ந்துள்ளது.

தனது திரைப்பயணத்தை பாடகராக தொடங்கிய ஹிப் ஹாப் ஆதி, இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள ஹிப் ஹாப் ஆதி 2017-ல் வெளியான ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்துள்ளார். சுந்தர் சி – குஷ்பு தயாரித்துள்ள இந்தப் படத்தில் சைத்ரா, கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் இருந்து வெளியான ‘ஆரா 10/10’, ‘பப்பாளி பழமே’ ஆகிய பாடல்களும், சமீபத்தில் வெளியான டீசரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த திரைப்படம் செப்டம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading