ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் ஆகியோர் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கி வரும் பிரம்மாண்ட திரைப்படமான ‘ராமாயணா’ குறித்து படக்குழு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட டிரைலர், திட்டமிட்டபடி வெளியாகாமல் பின்னர் ஒரு தேதியில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்ததன் மூலம் ‘ராமாயணா’ திரைப்படத்தை உலகளவில் கொண்டு செல்லும் கனவு நனவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் 100 ஆண்டு வரலாற்றில், ஹாலிவுட் தரத்தில் உலகம் முழுவதும் திரையிடப்படும் படைப்பாக இது அமையும் என்றும், இந்திய கலாச்சாரம் மற்றும் இதிகாசக் கதைகளின் பெருமையை உலக ரசிகர்களிடம் புதிய உற்சாகத்துடன் கொண்டு சேர்க்கும் முயற்சி இதுவெனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தப் பயணத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள படக்குழு, டிரைலர் வெளியீட்டுத் தேதியை விரைவில் அறிவிப்பதாக கூறியுள்ளது. 2026-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு, ‘ராமாயணா’ திரைப்படம் ஐமேக்ஸ் திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.
—
