‘பகவந்த் கேசரி’ படத்தை பாராட்டினார்… முதல்வர் விஜய்யுடனான சந்திப்பை பகிர்ந்த இயக்குனர் அனில் ரவிப்புடி!

முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று வெளியாகும் நிலையில், படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா மற்றும் இயக்குநர் அனில் ரவிப்புடி சமீபத்தில் அளித்த பேட்டி கவனம் பெற்றுள்ளது. ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் தழுவலாக உருவாகியுள்ள இந்தப் படத்தை முன்னிட்டு, விஜய்யை நேரில் சந்தித்த அனுபவத்தை அனில் ரவிப்புடி பகிர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘வாரிசு’ படப்பிடிப்பின் போது இயக்குநர் வம்சி மூலம் முதன்முறையாக விஜய்யை சந்தித்ததாக தெரிவித்தார். பின்னர் ஹைதராபாத்தில் ‘GOAT’ படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஜெகதீஷ் குழுவிலிருந்து திடீரென அழைப்பு வந்ததாகவும், அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவிட்டு விஜய்யை சந்திக்க சென்றதாகவும் கூறினார். அப்போது சுமார் 15 நிமிடங்கள் விஜய்யுடன் தனியாக உரையாடியதாக அவர் நினைவுகூர்ந்தார்.

அந்த சந்திப்பில், ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தை பார்த்து மிகவும் ரசித்ததாகவும், குறிப்பாக சில காட்சிகள் நீண்ட நாட்களாக மனதில் நிற்பதாகவும் விஜய் பாராட்டியதாக அனில் ரவிப்புடி தெரிவித்தார். அந்த பாராட்டு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக கூறிய அவர், உடனடியாக நடிகர் மகேஷ் பாபுவை தொடர்புகொண்டு அந்த சந்தோஷமான அனுபவத்தை பகிர்ந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading