மாணவர் போராட்டத்தை கைவிட சல்மான் கான் வேண்டுகோள்… பிரதமர் மீது நம்பிக்கை வையுங்கள் என பதிவு!

நீட் தேர்வுத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லியில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் சூழலில், பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பலரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக நடிகர் சல்மான் கானும் ஏற்கனவே தனது குரலை பதிவு செய்திருந்தார். இதற்கிடையில், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து மீண்டும் கருத்து தெரிவித்த சல்மான் கான், பிரதமரின் உறுதிமொழியை நம்பி மாணவர்கள் போராட்டத்தை நிறுத்தி, பாதுகாப்பாக தங்களது வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய சோனம் வாங்சுவை நேரடியாக குறிப்பிட்டு, “சோனம், இது முடிந்துவிட்டது நண்பா… இனி இதை நீட்டிக்க வேண்டாம். ஏதாவது தேவைப்பட்டால் வீட்டிலிருந்து உணவு அனுப்புகிறேன். தயவுசெய்து சாப்பிடுங்கள்” என்று அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து சோனம் வாங்சு தனது போராட்டத்தை வாபஸ் பெற்ற நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மட்டும் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading