மம்முட்டியின் பிறந்தநாளில் வெளியான தனுஷூடன் அவர் நடித்துள்ள ‘ஓம்’ பட ஸ்பெஷல் கிளிம்ப்ஸ்!

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘ஓம்’. ‘அமரன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து வருகின்றன.

ஆக்‌ஷன் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் மலையாள முன்னணி நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்திலும், பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா மற்றொரு முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். இந்த நிலையில், மம்முட்டி தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நாளில் ‘ஓம்’ படக்குழு சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. இதில் மம்முட்டி ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் பெயர் ‘பர்மா கார்த்திகேயன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெளியான ‘ஓம்’ படத்தின் டைட்டில் போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், திரைப்படம் அக்டோபர் 16-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மம்முட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் இணைந்து வெளியாகியுள்ள ‘ஓம்’ கிளிம்ப்ஸ் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading