நயன்தாராவுக்கு 60 அடி உயர கட் அவுட்! ‘மூக்குத்தி அம்மன் 2’

நடிகை நயன்தாரா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய நிலையில், இரண்டாம் பாகத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் நயன்தாராவுடன் ரெஜினா கேசண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, துனியா விஜய், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தைத் தயாரித்துள்ளார். குஷ்பு சுந்தர் மற்றும் விக்னேஷ் சிவனும் இணைந்து தயாரித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ‘ரைஸ் ஆஃப் மஹாசக்தி’ என்ற பெயரில் வெளியான டீசரில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்டமான காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் அம்மன் வேடத்தில் நடித்துள்ள நயன்தாராவுக்காகப் பூந்தமல்லியில் 60 அடி உயரத்தில் பிரம்மாண்ட கட் அவுட் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடிகை ஒருவருக்காக அமைக்கப்பட்ட மிக உயரமான கட் அவுட் இதுவெனப் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் திரையரங்கில் இந்தியாவிலேயே முதன்முறையாக நடிகை நயன்தாராவுக்கு 60 அடி உயரக் கட் அவுட் அமைக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading