ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கிய ‘ஜெயிலர் 2’ திரைப்படம் கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அனிருத் இசையமைத்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இசையமைப்பாளர் அனிருத், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை நேரில் சந்தித்துள்ளார்.
‘ஜெயிலர் 2’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அனிருத் ஏ.ஆர். ரஹ்மானைச் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இந்தச் சந்திப்பு இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தில் இடம்பெறும் ‘ராவணா தாண்டவம்’ பாடல் சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடலை அனிருத் மற்றும் ஜி.வி. பிரகாஷ் இணைந்து பாடியுள்ளனர். வெளியானது முதல் இப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
