கோவையில் திரிஷாவைக் காணக் குவிந்த ரசிகர்கள்!

கோவை மாவட்டம் காந்திபுரம் நூறடி சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட தனியார் மொபைல் கடையின் திறப்பு விழாவில் நடிகை திரிஷா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இன்று நடைபெற்ற விழாவில் அவர் கடையைத் திறந்து வைத்தார்.

திரிஷாவின் வருகையை அறிந்த 500-க்கும் மேற்பட்ட ரசிகர்களும் பொதுமக்களும் கடையின் முன்பு திரண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திரிஷா கடைக்கு வந்தபோது, அவரைக் காண்பதற்காக ரசிகர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் முன்னேறியதால் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. இதையடுத்து, காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியாளர்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

கடைத் திறப்பு விழாவை முடித்துக்கொண்டு புறப்பட்ட திரிஷா, அங்கு திரண்டிருந்த ரசிகர்களையும் பொதுமக்களையும் பார்த்துக் கையசைத்தார். மேலும், சிலருடன் கைகுலுக்கியும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். பின்னர், காரில் இருந்தபடியே சுமார் 100 மீட்டர் தூரம் சென்ற அவர், ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading