விஜய் தேவரகொண்டா நடித்திருந்த “கிங்டம்” மற்றும் தெலுங்கு திரைப்படமான “அனகனக ஒக்க ராஜுக்” உள்ளிட்ட படங்களில் நடிக்க ஸ்ரீலீலா மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எம்பிபிஎஸ் படிப்பை முடித்துள்ள அவர் தற்போது இன்டர்ன்ஷிப் மேற்கொண்டு வருவதுடன், அடுத்ததாக எம்டி படிப்பிற்கான நீட் தேர்வுக்கும் தயாராகி வருகிறார். இதன் காரணமாகவே புதிய படங்களில் நடிக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்ரீலீலாவின் குடும்பத்தினரும் மருத்துவப் படிப்பை முழுமையாக முடித்த பிறகே நடிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
—
