சல்மான் கானின் புதிய தோற்றம்… ரசிகர்களை கவலையில் ஆழ்த்திய வைரல் வீடியோ!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த ஜூலை 17-ஆம் தேதி மும்பையில் உள்ள குடிசைப் புனரமைப்பு ஆணைய அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டிருந்த நவீன தரவு சேகரிப்பு மற்றும் தகவல் சரிபார்ப்பு தொழில்நுட்ப சர்வர் அறையை அவர் திறந்து வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அந்த நிகழ்வின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. அதில், தாடி மற்றும் மீசை இல்லாத புதிய தோற்றத்தில், வெளிர் நிற சட்டை மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து சல்மான் கான் தோன்றினார். இதுவரை ரசிகர்கள் பார்த்து வந்த கட்டுமஸ்தான உடலமைப்பை விட, அவர் மிகவும் மெலிந்த தோற்றத்தில் இருந்தது பலரது கவனத்தை ஈர்த்தது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களில் பலர், 60 வயதான சல்மான் கான் மிகவும் வயதான தோற்றத்தில் இருக்கிறார், அவருக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதா என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர், அவர் முன்பைவிட மிகவும் ஒல்லியாக காணப்படுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மறுபுறம், மற்றொரு தரப்பினர் இதற்கு வேறு விளக்கமும் அளித்து வருகின்றனர். வயதுக்கு ஏற்ப உடல் தோற்றத்தில் மாற்றம் ஏற்படுவது இயல்பான விஷயம்தான் என்றும், அதில் தேவையற்ற சர்ச்சையை உருவாக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading