தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் யோகிபாபு, நகைச்சுவை வேடங்கள் மட்டுமின்றி கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். ‘ஜெயிலர் 2’, ‘முக்குத்தி அம்மன் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், ‘ஆன் ஆர்டினரி மேன்’ படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.
https://m.youtube.com/watch?v=qDRgmO0j57c&pp=ygUSWW9naSBiYWJ1IHNpbmdhcmFt
இந்நிலையில், கே.வி. கதிர்வேலு எழுதி இயக்கியுள்ள ‘சிங்காரம்’ திரைப்படத்தில் யோகிபாபு, எம்.எஸ். பாஸ்கர், மனோபாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சென்ட்ராயன், ஜி. மாரிமுத்து, வேல ராமமூர்த்தி, தீபா, இளவரசு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். ராக் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமணா பாலாஜி மற்றும் பத்மாவதி காந்தி தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
ஒரு சாமானிய மனிதனின் ஊக்கமளிக்கும் பயணத்தையும், அவரது வாழ்க்கையை மாற்றும் சம்பவங்களையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘சிங்காரம்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
