சந்தானத்தின் ‘லவ் பைட்’ படப்பிடிப்பு நிறைவு… டிசம்பரில் ரிலீஸ் !

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘லவ் பைட்’. அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் எழுதி இயக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். இதில் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், ஆனந்த்ராஜ், கல்கி ராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஜாம்பி கதைக்களத்துடன் திரில்லர் மற்றும் நகைச்சுவை கலந்த படமாக இப்படம் உருவாகிறது. கடந்த மே 8-ம் தேதி படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில், சமீபத்தில் ‘லவ் பைட்’ எனத் தலைப்பு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சந்தானம் மற்றும் அபர்ணா தாஸ் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், ‘லவ் பைட்’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading