‘பார்க்கிங்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், தனது அடுத்த படத்தை முதலில் நடிகர் சிலம்பரசனை வைத்து இயக்க திட்டமிட்டிருந்தார். அது சிம்புவின் 49-வது படமாக உருவாக இருந்தாலும், சில காரணங்களால் அந்த முயற்சி பின்னர் கைவிடப்பட்டது.
அதன்பிறகு, அந்தக் கதையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. தற்போது அந்த தகவல் உறுதியான நிலையில், நீண்ட காலமாக முன்னேற்றம் இல்லாமல் இருந்த இந்த திரைப்படம் மீண்டும் வேகமெடுத்துள்ளது.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க, கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, படத்திற்காக தனி அலுவலகம் அமைக்கப்பட்டு, பூஜையுடன் முன்தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
