அதர்வா – உப்பேந்திரா – பிரபுதேவா கூட்டணியில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய திரைப்படம்?

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களையும் தனித்துவமான திரைக்கதைகளையும் கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர்களில் கார்த்திக் சுப்பராஜும் ஒருவர். ‘பீட்சா’, ‘ஜிகிர்தண்டா’, ‘பேட்ட’, ‘ஜகமே தந்திரம்’, ‘ரெட்ரோ’ உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய அவர், தற்போது புதுமுகங்களை மையமாகக் கொண்டு குறுகிய காலக்கட்டத்தில் ஒரு புதிய படத்தை உருவாக்கி வருகிறார். இதனுடன், மேலும் ஒரு ஆக்ஷன் திரைப்படத்திற்கான பணிகளையும் ஒரே நேரத்தில் முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த புதிய ஆக்ஷன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்கியுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் அதர்வா நடிக்க, எதிர்மறை கதாபாத்திரத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் உப்பேந்திரா நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், நடன இயக்குநரும் நடிகருமான பிரபுதேவாவும் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றை ஏற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வருவதாகவும், படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading