இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘ஜோஷ்வா இமைப்போல் காக்க’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவிலான வரவேற்பையும் வணிக வெற்றியையும் பெறவில்லை.
இந்தச் சூழலில், தனது நிதி சவால்களை சமாளிக்கும் நோக்கில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார் கவுதம் வாசுதேவ் மேனன்.
இயக்கத்தை தற்காலிகமாக ஒதுக்கி வைத்து, நடிகராகவே அதிக கவனம் செலுத்தி வந்த அவர், ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் பணிக்கு திரும்பியுள்ளார்.அந்த வகையில், புதிய திரைப்படம் ஒன்றின் பணிகளை கவுதம் வாசுதேவ் மேனன் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற சந்தோஷ் கதாநாயகனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
