தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவரானார் இயக்குனர் சேரன்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று (ஜூலை 19) நடைபெற்றது. இதில் ‘நம்ம கே. பாக்யராஜ் அணி’ சார்பில் இயக்குநர் சேரனும், ‘திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ் அணி’ சார்பில் வி.சி. குகநாதனும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.

சங்கத்தின் 692 உறுப்பினர்களில் 483 பேர் வாக்களிக்கத் தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை வடபழனியில் உள்ள திரை இசைக் கலைஞர்கள் சங்க அரங்கில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மொத்தம் பதிவான 432 வாக்குகளில், இயக்குநர் சேரன் 279 வாக்குகளும், வி.சி. குகநாதன் 155 வாக்குகளும் பெற்றனர். இதன்மூலம், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய தலைவராக இயக்குநர் சேரன் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் துணைத் தலைவர்களாக சமுத்திரக்கனி (258 வாக்குகள்) மற்றும் சினேகன் (228 வாக்குகள்) தேர்வாகினர். பொதுச்செயலாளராக எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தேர்வு செய்யப்பட்டார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading