சூர்யா – ஹெச் வினோத் காம்போவில் உருவாகும் சூர்யா 49?

ஹெச். வினோத் இயக்கத்தில் முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இயக்குநர் ஹெச். வினோத்தின் அடுத்த கூட்டணி குறித்த தகவல்களும் கோலிவுட்டில் கவனம் பெற்று வருகின்றன.


‘ஜனநாயகன்’ படத்திற்குப் பிறகு எந்த நடிகருடன் அவர் இணையப் போகிறார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானாலும், இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதற்கு முன்பு நடிகர் தனுஷை முன்னணி கதாபாத்திரத்தில் வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கும் திட்டம் இருந்ததாக கூறப்பட்டது. ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளும் நடைபெற்ற நிலையில், சில காரணங்களால் அந்தக் கூட்டணி தற்காலிகமாக கைவிடப்பட்டதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அதன்பிறகு புதிய கதையை உருவாக்குவதில் கவனம் செலுத்திய ஹெச். வினோத், கடந்த சில மாதங்களாக நடிகர் சூர்யாவை மனதில் வைத்து திரைக்கதை உருவாக்கி வந்ததாக கூறப்படுகிறது. அந்தக் கதை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய தகவல்களின்படி, சூர்யாவின் 49-வது திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading