மீண்டும் திரையரங்குகளில் முதல்வர் விஜய்யின் ‘திருப்பாச்சி’… ரீ-ரிலீஸ் அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய் நடிப்பில் பேரரசு இயக்கத்தில் உருவான ‘திருப்பாச்சி’ திரைப்படம், கடந்த 2005-ம் ஆண்டு சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அண்ணன் – தங்கை பாசத்தை மையமாக கொண்ட இப்படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. குறிப்பாக ரூ.32 கோடி வரை வசூல் செய்து, விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த ‘சிவகாசி’ திரைப்படமும் வெற்றி பெற்றது.

‘திருப்பாச்சி’ திரைப்படத்தில் விஜய்யுடன் திரிஷா, மல்லிகா, பசுபதி, மனோஜ் கே. ஜெயன், கோட்டா ஸ்ரீனிவாச ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு மணி ஷர்மா, தீனா மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் இசையமைத்திருந்தனர். அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட் ஆகின. மேலும், இந்த திரைப்படம் தெலுங்கில் ‘அன்னவரம்’ என்றும், கன்னடத்தில் ‘தங்கிகாகி’ என்றும் பெயர் மாற்றப்பட்டு ரீமேக் செய்யப்பட்டது.

தனது தங்கையின் வாழ்க்கைக்காக எதையும் செய்யத் தயங்காத அண்ணனின் பாசத்தை மையமாக கொண்ட கதையில், விஜய்யின் தங்கையாக நடிகை மல்லிகா நடித்திருந்தார். தங்கையின் சந்தோஷம் மற்றும் பாதுகாப்புக்காக எந்த எல்லைக்கும் செல்லும் கதாபாத்திரத்தை விஜய் மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியிருந்தார்.

ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ‘திருப்பாச்சி’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக திருப்பதி பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது .

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading