‘தி இந்தியா ஸ்டோரி’ டிரெய்லர் வெளியீடு… சமூக பிரச்சினையை பேசும் காஜல் அகர்வாலின் புதிய படம்!

‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. காஜல் அகர்வால் மற்றும் ஸ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம், வரும் ஜூலை 24-ஆம் தேதி தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சாகர் பி. ஷிண்டே தயாரிப்பில், டி.கே. சேட்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், சமூக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்குப் பிறகு தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வரும் காஜல் அகர்வால், இந்தப் படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

குறிப்பாக, ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படம் விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்களின் தவறான பயன்பாடு, அதனுடன் தொடர்புடைய ஊழல்கள் மற்றும் அதன் காரணமாக பொதுமக்களின் உடல்நலத்தில் ஏற்படும் பாதிப்புகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இது ஒரு குடும்பத்தின் கதையை மட்டுமல்லாமல், நாட்டின் உணவு பாதுகாப்பு மற்றும் பொதுச் சுகாதாரத்தை பாதிக்கும் மிகப்பெரிய சமூக பிரச்சினையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.மேலும், இந்த நிலைமையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களும், உரிய கண்காணிப்பும் அவசியம் என்பதை திரைப்படம் வலியுறுத்துகிறது. தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading