மறைந்த கண்டுபிடிப்பாளரும், “இந்தியாவின் எடிசன்” எனப் போற்றப்படும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ராக்கெட்ரி’ படத்திற்குப் பிறகு மாதவன், ஜி.டி. நாயுடு கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார். டிரை கலர்ஸ் பிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான டிரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், ‘ஜி.டி.என்.’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 7-ஆம் தேதி பான் இந்திய அளவில் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
