மோகன்லாலின் மகள் விஸ்மயா கதாநாயகியாக அறிமுகம்… ஆக்ஷன் அவதாரத்தில் அசத்தல்!

மோகன்லாலின் குடும்பத்தில் ஏற்கனவே மோகன்லாலின் மகன் பிரணவ் நடிகராக அறிமுகமாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது அவரது மகள் விஸ்மயாவும் திரையுலகில் தனது பயணத்தை தொடங்க உள்ளார். முதல் படத்திலேயே ஆக்ஷன் கதாபாத்திரத்தை தேர்வு செய்துள்ள அவர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

முன்னதாக, மோகன்லாலின் மகன் பிரணவ், இயக்குநர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிறகு, அதே இயக்குநரின் ‘ஆதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். முழுக்க முழுக்க அதிரடி கதைக்களத்தில் உருவான அந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றதுடன், அதில் மோகன்லாலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதேபோல், தற்போது விஸ்மயா நாயகியாக அறிமுகமாகும் ‘தொடக்கம்’ திரைப்படத்தை, மலையாள சினிமாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘2018’ படத்தின் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியுள்ளார். ரூ.200 கோடிக்கும் அதிக வசூலைப் பெற்ற இயக்குநரின் படைப்பு என்பதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தனது முதல் படத்திலேயே ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஸ்மயா, ‘முவாய் தாய்’ தற்காப்புக் கலையில் பயிற்சி பெற்றிருப்பதால், பல சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், மகளின் முதல் திரைப்பயணத்தை சிறப்பிக்கும் வகையில் மோகன்லாலும் இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். குடும்பத்தின் இரண்டாவது தலைமுறை நடிகையாக விஸ்மயா அறிமுகமாகும் ‘தொடக்கம்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading