வருங்கால கணவரிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?… மனம் திறந்த பிரீத்தி முகுந்தன்!

நடிகை பிரீத்தி முகுந்தன், தனது வருங்கால வாழ்க்கைத் துணையிடம் எதிர்பார்க்கும் முக்கியமான குணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர், “என் வாழ்க்கைத் துணையிடம் நான் அதிகமாக எதிர்பார்ப்பது அக்கறைதான். என்னுடைய உணர்வுகளையும், எண்ணங்களையும் புரிந்துகொள்ளக்கூடிய ஒருவர்தான் என் வாழ்க்கைத் துணையாக வர வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பிரீத்தி முகுந்தன் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான ‘பிளாஸ்ட்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, பாக்ஸ் ஆபீஸில் சுமார் ரூ.76 கோடி வசூல் செய்தது. ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவான இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, நடிகர் அதர்வாவுடன் இணைந்து நடித்துள்ள ‘இதயம் முரளி’ திரைப்படம் கடந்த 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தனது முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் பிரீத்தி முகுந்தன் நடித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading