லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ள ‘டிசி’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்..!

வெற்றிகரமான இயக்குநராக தனக்கென தனி முத்திரை பதித்துள்ள லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகராகவும் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிசி’ திரைப்படத்தில் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் ‘தேவதாஸ்’ என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், வாமிகா கபி, சஞ்சனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் கிளிம்ப்ஸ், டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

பழிவாங்கும் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள வன்முறை மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டன. ‘ராகா ஆப் ரிவெஞ்’ மற்றும் ‘ஹேங்க் ஓவா’ பாடல்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளன.வரும் ஜூலை 31-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள ‘டிசி’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஏ’ (Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால், முழு அளவிலான வன்முறை நிறைந்த ஆக்சன் திரைப்படமாக ரசிகர்களை திரையரங்குகளில் சந்திக்க ‘டிசி’ தயாராகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading