‘மண்டாடி’ படத்தில் மிரட்டும் சூரி… வெளியான ப்ரோமோ பாடல் அப்டேட்‌!

‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக உயர்ந்த நடிகர் சூரி, அதனைத் தொடர்ந்து ‘கொட்டுக்காளி’, ‘கருடன்’, ‘மாமன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார். இதில் ‘கொட்டுக்காளி’ திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனத்தை ஈர்த்தது. அதேசமயம், ‘கருடன்’ மற்றும் ‘மாமன்’ திரைப்படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, நடிகர் சூரியின் மார்க்கெட்டை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தின.

தற்போது இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகி வரும் ‘மண்டாடி’ திரைப்படத்தில் சூரி நடித்துள்ளார். அவரது திரைப்பயணத்திலேயே அதிகபட்சமாக ரூ.75 கோடி பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாக ‘மண்டாடி’ உருவாகி வருகிறது. இந்த படத்தின் ப்ரோமோ பாடல் வரும் ஜூலை 18-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், நடிகர் சூரி மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்தில் இடம்பெற்றுள்ளார். மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு இந்த திரைப்படத்தின் ப்ரோமோ பாடலில் அவர் அதிரடியாக நடனமாடியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தில் சூரியுடன் தெலுங்கு நடிகர் சுஹாஸ் மற்றும் மகிமா நம்பியார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading