பிரபாஸின் ‘பெளசி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு… டிசம்பர் 3-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது!

‘பாகுபலி’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா நட்சத்திரமாக உயர்ந்துள்ள பிரபாஸ், தற்போது ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகி வரும் ‘பெளசி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ரசிகர்களிடையே ஏற்கனவே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். இமான்வி கதாநாயகியாக அறிமுகமாகும் இப்படத்தில் மிதுன் சக்ரவர்த்தி, ஜெயபிரதா, சைத்ரா ஜே ஆச்சார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.அதிரடி மற்றும் காதல் கலந்த கதைக்களத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில், பிரபாஸின் புதிய தோற்றமும், ஹனு ராகவபுடியின் உணர்வுப்பூர்வமான திரைக்கதையும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ‘பெளசி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை பிரபாஸ் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, இப்படம் வரும் டிசம்பர் 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் வங்காள மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ள இப்படம், பிரபாஸின் அடுத்த பிரம்மாண்ட வெற்றிப்படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading