சென்சார் போர்டை அகற்ற வேண்டும்… இயக்குனர் ராம் கோபால் வர்மா பரபரப்பு கருத்து!

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ராம் கோபால் வர்மா, தனது திரைப்படங்களின் மூலம் பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்று வருபவர். குறிப்பாக, இந்திய திரைப்படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கும் சென்சார் போர்டு குறித்து அவர் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இந்த நிலையில், இந்தியாவில் சென்சார் போர்டை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று ராம் கோபால் வர்மா கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “சென்சார் போர்டு ஒழிக்கப்பட வேண்டும். இன்றைய டிஜிட்டல் உலகில் சென்சார் போர்டு என்பது காலாவதியானதும் தேவையற்றதுமான அமைப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஸ்மார்ட்போன்கள், உலகளாவிய ஸ்ட்ரீமிங் தளங்கள் மற்றும் எல்லையற்ற தகவல்கள் கிடைக்கும் இந்த காலத்தில், ஒரு இயக்குநரின் உண்மையான பார்வையிலிருந்து பெரியவர்களை அரசு நியமிக்கும் குழு பாதுகாக்க முடியும் என்று நினைப்பது காலத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமல்ல, அது முற்றிலும் முட்டாள்தனமானது” என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்தார். ராம் கோபால் வர்மாவின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading