தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ராம் பொத்தினேனி, முதல்முறையாக கதை எழுதி புதிய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார். தனது ரெப்போ சினிமாடிக்ஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்கும் அவர், கதாநாயகனாகவும் நடிக்கிறார். ராம் பொத்தினேனியின் 23-வது திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் ஸ்ரீநிதி ஷெட்டியுடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால், அவர் அதிக சம்பளம் கேட்டதாக கூறப்படுவதால், அடுத்ததாக நடிகை கயாடு லோஹரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
எனினும், கால்ஷீட் பிரச்னை காரணமாக கயாடு லோஹராலும் இப்படத்தில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது ‘வாத்தி’ பட நாயகி சம்யுக்தா மேனனிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
