‘மீசைய முறுக்கு 2’ படத்தின் 5-வது பாடல் ‘கலைவாணியே’ பாடல் வெளியாகி வைரல்!

ராப் இசையின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமான ஹிப் ஹாப் ஆதி, தொடர்ந்து இசையமைப்பாளர், நடிகர் மற்றும் இயக்குநர் என பன்முகத் திறமையால் ஜொலித்தது வருகிறார். 2017-ம் ஆண்டு வெளியான ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் இயக்குநராகவும் புதிய பயணத்தை தொடங்கிய ஹிப் ஹாப் ஆதி* பின்னர் ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’, ‘சிவகுமாரின் சபதம்’, ‘அன்பறிவு’ உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ஒரு இளைஞனின் கல்லூரி வாழ்க்கை, கனவுகள், காதல் மற்றும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் போராட்டங்களை மையமாக வைத்து உருவான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்த பாகமாக ‘மீசைய முறுக்கு 2’ உருவாகி வருகிறது. இப்படத்தை ஹிப் ஹாப் ஆதி இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடிக்காறார். மேலும், இந்தப் படத்தில் அவர் இரண்டு வேடங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் சி – குஷ்பு தயாரிப்பில் உருவாகும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் சைத்ரா, கெட்டிகா சர்மா மற்றும் ரம்யா ரங்கநாதன் ஆகியோர் கதாநாயகிகளாகவும், ஹர்ஷத் கான்,நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில்,இப்படத்தின் 5-வது பாடலான ‘கலைவாணியே’ தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ‘ஆரா 10/10’, ‘கோயிந்தம்மா’ உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், புதிய பாடலும் கவனம் பெற்று வருகிறது. இப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading