கையில் வேல்… யானை மீது தனுஷ்! வெற்றிமாறன் இயக்கத்தில் ‘தமிழ் முருகன்’

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘தமிழ் முருகன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அறிவுமதியின் எழுத்தில் உருவாகும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் பீரியட் திரைப்படமாக உருவாகிறது. தற்போது இப்படத்தின் முன்னோட்ட வீடியோவும் வெளியாகியுள்ளது.

‘தமிழ் மக்களுக்கும், நிலத்திற்கும் பாதுகாவலன், வீரன், மன்னன் மற்றும் தலைவன்’ என்ற குறிப்புடன் இந்த முன்னோட்ட வீடியோவை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், கடவுள் முருகனைப் போன்று கையில் வேல் ஏந்தியபடி, யானையின் மீது தனுஷ் அமர்ந்து வரும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதனால், படத்தில் முருகன் வேடத்தில் தனுஷ் நடிப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, இயக்குநர் திரிவிக்ரம் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் புதிய திரைப்படம் தமிழ் கடவுள் முருகனை மையமாகக் கொண்டு உருவாக உள்ளது. அந்தப் படத்தில் முருகன் வடபுலத்தில் பிறந்தவர் என சித்தரிக்கப்படுவதாக கூறப்பட்டதால் தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் ‘தமிழ் முருகன்’ திரைப்படத்தின் மீது தற்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading