அருள்நிதி – அமீர் கூட்டணியில் ‘வேட்ட சாமி’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அருள்நிதி, தற்போது இயக்குநரும் நடிகருமான அமீருடன் இணைந்து ‘வேட்ட சாமி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மாறுபட்ட பின்னணியில் உருவாகி வரும் இந்தப் படத்தில் இருவரும் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

‘பம்பர்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த எம்.செல்வகுமார் இப்படத்தை இயக்கி வருகிறார். ‘7 மைல்ஸ் பர் செகண்ட்’ தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தின் போஸ்டரில், ‘சட்டத்திடம் இருந்து தப்பி, இறைவனை எதிர்கொள்வது’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் படத்தின் கதைக்களம் எத்தகைய பின்னணியை கொண்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

‘வேட்ட சாமி’ படத்தின் வாயிலாக மாதவி பின்னணிப் பாடகியாக திரையுலகில் தனது அறிமுகத்தை பதிவு செய்துள்ளார். இதில் இடம்பெறும் ‘சுடலைமாடன் வேட்டைப்பாடல்’ என்ற நாட்டுப்புறப் பாடலை அவர் பாடியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் பாடலின் ஒலிப்பதிவு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்துள்ளன. வீரம், தெய்வ நம்பிக்கை மற்றும் மண்ணின் அடையாளம் ஆகியவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, அருள்நிதி – அமீர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘வேட்ட சாமி’ திரைப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading