பிரம்மாண்டமான ‘ராமாயணா’ படம் குறித்து வெளியான டூயல் அப்டேட்.!

காலத்தால் அழியாத இதிகாசமான ‘ராமாயணம்’ புதிய திரை வடிவில் உருவாகி வருகிறது. நிதிஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் ரூ.4,000 கோடிக்கும் அதிகமான பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் நிலையில், தற்போது இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

முதலாவதாக, கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், படத்தின் அகில இந்திய திரையரங்கு விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் படத்தை மிகப் பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இரண்டாவது முக்கிய அறிவிப்பாக, ராமாயணா படத்தின் டிரைலர் வரும் ஜூலை 18, 2026 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சினிமாகான் நிகழ்வில் மட்டும் திரையிடப்பட்ட டிரைலர், தற்போது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்காக டிஜிட்டல் தளங்களில் வெளியிடப்பட உள்ளது.

இந்தப் படத்தில் ராவணனாக யஷ் நடித்திருப்பதுடன், இணை தயாரிப்பாளராகவும் செயல்படுகிறார். அனுமனாக சன்னி தியோல், லட்சுமணனாக ரவி துபே ஆகியோர் நடித்துள்ளனர். மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ், டிஎன்இஜி மற்றும் பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாகி, டால்பி சினிமா வடிவிலும் வெளியாக உள்ளது. இதன் முதல் பாகம் 2026 தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading