‘டாக்சிக்’ சம்பள பட்டியல் வைரல்… யஷ் முதல் நயன்தாரா வரை யாருக்கு எவ்வளவு சம்பளம்?

‘கேஜிஎப்’ மற்றும் ‘காந்தாரா’ படங்களுக்குப் பிறகு கன்னட திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘டாக்சிக்’. ஆகஸ்ட் 26-ஆம் தேதி வெளியாக உள்ள இப்படம் சுமார் ரூ.500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள யஷ், ரூ.50 கோடி சம்பளத்துடன் லாபத்தில் பங்கும் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் பெரிய வெற்றி பெற்றால், அவரது மொத்த வருமானம் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

படத்தில் நடித்துள்ள நடிகைகளின் சம்பள விவரங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதன்படி, கியாரா அத்வானிக்கு ரூ.15 கோடி, நயன்தாராவுக்கு ரூ.12 கோடி, ருக்மணி வசந்திற்கு ரூ.5 கோடி, ஹுமா குரேஷிக்கு ரூ.3 கோடி, தாரா சுட்டாரியாவுக்கு ரூ.2 கோடி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குநர் கீது மோகன்தாஸ், லாபத்தில் பங்கு என்ற அடிப்படையில் சம்பளம் பேசியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தை தயாரித்த கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading